மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்
05-Apr-2025
ராமநாதபுரம் : -வக்ப் வாரிய சட்டத்திருத்தத்தை கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தி வி.சி., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அற்புதகுமார், மேற்கு மாவட்டச் செயலாளர் பிரபாகர்தலைமை வகித்தனர். பொருளாளர் பாண்டித்துரை உட்பட பலர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை செயலாளர் விடுதலை சேகரன் வரவேற்றார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத்தலைவர் வரிசைமுகமது, மனிநேய ஜனநாயக கட்சி மாவட்ட அமைப்பாளர் முகமதுபுகாரி, ஜமாத் உலமாசபை ராமநாதபுரம் வட்டாரத்தலைவர் முகமது ரபிக் உலவி, மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் புவனா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதில் வக்ப் வாரிய சட்டத் திருத்தத்தை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ராமநாதபுரம் நகர் பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார்.-
05-Apr-2025