உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீரமாகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா துவக்கம் காப்பு கட்டுதலுடன் துவக்கம்

வீரமாகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா துவக்கம் காப்பு கட்டுதலுடன் துவக்கம்

சாயல்குடி : சாயல்குடி வீரமாகாளி அம்மன் கோயிலில் 31ம் ஆண்டு பொங்கல் விழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு மூக்கையூர் கடலில் புனித நீராடி பூர்ண கும்பம் எடுத்து வந்தனர். காலை 9:00 மணிக்கு கோயில் முன்பு கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடந்தது.மூலவர் வீரகாளியம்மனுக்கு அலங்காரம் தீபாராதனை முடிந்து காப்பு கட்டுதல் துவங்கியது. அக்.3 மாலை விளக்கு பூஜை, அக்.4 அம்மன் கரகம், பால்குடம், அக்னி சட்டி, அன்னதானம், ரத ஊர்வலம், பூச்சொரிதல் நடக்கிறது.ஏற்பாடுகளை சாயல்குடி வீரசைவ ஆண்டிப்பண்டாரத்தார்கள் சங்கம் மற்றும் இளைஞரணியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை