மேலும் செய்திகள்
ரோட்டோர சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்
22-Sep-2024
பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றிய கிராமங்களில் ரோட்டோரங்களில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துஉள்ளதால் வாகன ஓட்டிகள், மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.போகலுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.இதன்படி பல நுாறு கிராமங்களை உள்ளடக்கி இப்பகுதி உள்ளது.தொடர்ந்து மாநில மற்றும் பிரதான் மந்திரி கிராம சாலை திட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது.இதனால் கிராமப்புற பஸ் வசதி, விவசாயப் பணிகளை மேற்கொள்ள வாகன போக்குவரத்திற்கு எளிதாக இருக்கிறது. இந்நிலையில் ரோட்டோரம் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிக்கும் நிலை உள்ளது. தொடர்ந்து பஸ் உட்பட டூவீலர், ஆட்டோக்களில் பயணிக்கும் மக்கள்சீமைக்கருவேல மரங்களால் காயங்களுடன் செல்லும் நிலை உள்ளது.மேலும் எதிர் எதிரில் வரும் வாகனங்கள் குறித்து அறிய முடியாமல் விபத்துக்களும் அடிக்கடி நிகழ்கிறது. ஆகவே மக்களின் பாதுகாப்பு கருதி சீமைக்கருவேல மரங்களை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
22-Sep-2024