உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உத்தரகோசமங்கையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

உத்தரகோசமங்கையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான வெளி மாவட்டம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். குறிப்பாக பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் கார்கள் மற்றும் வாகனங்கள் ராஜகோபுரத்தின் கிழக்கு ரத வீதியின் பக்கவாட்டு பகுதியில் சாலையோரங்களில் அதிகளவு நிறுத்தி விடுகின்றனர். இதனால் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உத்தரகோசமங்கை கோயிலின் பக்கவாட்டு பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளால் நாளுக்கு நாள் ரோடு சுருங்கி வருகிறது. ஆட்டோ உள்ளிட்ட டூவீலர்கள் வீதி ஓரங்களில் நிறுத்தப்படுவதால் ராமநாதபுரத்தில் இருந்து முதுகுளத்துார், தேரிருவேலி, சாயல்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் போக்குவரத்து நெரிசலால் பெரும் சிரமத்தை சந்திக்கின்றன. எனவே உத்தரகோசமங்கை போலீசார் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கு இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ