உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிரிக்கெட்டில் வெற்றி

கிரிக்கெட்டில் வெற்றி

கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் புல்லந்தை கிராமத்தை சேர்ந்த மனோரஞ்சிதம் பி.எஸ்.சி., கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தென் மண்டல அளவிலான பல்கலை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான 10 நாள் பயிற்சி முகாம் கர்நாடகா மாநிலம் மைசூரில் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவி தேர்வானார்.பின்னர் அழகப்பா பல்கலை கிரிக்கெட் அணியில் தேர்வாகி போட்டியில் விளையாடினார். மாணவியை முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாகிப் மற்றும் நிர்வாகத்தினர், கல்லுாரி முதல்வர் ராஜசேகர், உடற்கல்வி இயக்குனர் தவசிலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ