மேலும் செய்திகள்
குடியிருப்பு பகுதியில் மழைநீர் அகற்றம்
23-Nov-2024
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராம உதவியாளர்கள், மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உதவியாளர் நிலையில் இருந்து கிராம நிர்வாக அதிகாரி பதவி உயர்வு காலாவதி ஆகியதை கண்டித்தும், காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத் தலைவர் முனியசாமி, செயலாளர் இளங்கோ, பொருளாளர் சரண்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
23-Nov-2024