உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி: பரமக்குடி சப் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட செயலாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். பொருளாளர் திருப்பதி முன்னிலை வகித்தார்.அப்போது காலமுறை ஊதியம், பதவி உயர்வு மற்றும் 'பி' கிரேடு அறிவிக்க வேண்டும். கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர். இதுபோல ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி