உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராம விற்பனை துாதுவர்கள் கலந்துரையாடல் கூட்டம்

கிராம விற்பனை துாதுவர்கள் கலந்துரையாடல் கூட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் வரத்தை அதிகரிக்க கிராம அளவிலான விற்பனை துாதுவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.மாவட்ட வேளாண் துணை இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் சபிதா பேகம் வேளாண் வணிகத்துறையில் உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.ஒவ்வொரு ஊராட்சிக்கும் 2 விற்பனை துாதுவர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த ஊரில் விளையும் விளைப்பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேமிப்பு கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், உலர் களங்கள், எடை மேடை ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்த விழிப்புணவுர்வு ஏற்படுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரவணக்குமார், மேற்பார்வையாளர் மங்களசாமி, மேலாளர் பழனிக்குமார் திட்டங்கள் குறித்து விளக்கினர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் (வேளாண் வணிகம்) திருத்துவ நேசன், செந்தில்குமார், சரிதாகுமாரி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ