உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சொந்த செலவில் நிழற்குடை அமைத்த கிராம மக்கள்

சொந்த செலவில் நிழற்குடை அமைத்த கிராம மக்கள்

பெருநாழி: பெருநாழி அருகே டி.வாலசுப்பிரமணியபுரம் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகளுக்காக பயணியர் நிழற்குடை இடித்து அகற்றப்பட்ட நிலையில் பல முறை மனு அளித்தும் பயனில்லாததால் சொந்த செலவில் கிராம மக்கள் பயணிகள் நிழற்குடை அமைத்தனர்.சாயல்குடி, கமுதி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்குரிய பஸ்களுக்காக கிராம மக்கள் பயணியர் நிழற்குடை இல்லாததால் திறந்த வெளியில் மழையிலும், வெயிலிலும் சிரமத்துடன் பஸ் நிறுத்தத்திற்காக சென்று வருகின்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இரண்டு ஆண்டுகளாகியும் புதிய நிழற்குடை அமைக்காததால் சொந்தமாக நாமே முயற்சி செய்தால் என்ன என்ற எண்ணத்தில் துத்திநத்தம் கிராம மக்கள் புதிய நிழற்குடையை தங்களது சொந்த செலவில் அமைத்துள்ளனர்.துத்திநத்தத்தைச் சேர்ந்த பயணியர் நிழற்குடை ஒருங்கிணைப்பாளர் விவசாயி செந்தூர் பாண்டி கூறியதாவது:கமுதி யூனியனுக்கு உட்பட்ட டி.வாலசுப்ரமணியபுரம் ஊராட்சியில் உள்ள துத்திநத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலிலும் மழையிலும் பெரும் சிரமத்தை சந்தித்தனர். புதிய நிழற்குடை வேண்டி கமுதி யூனியன் அலுவலகத்தில் பலமுறை மனு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து இக்கிராமத்தைச் சேர்ந்த குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இளைஞர்களின் சிறு சேமிப்பு தொகையை கொண்டு ரூ.55 ஆயிரத்தில் பயணியர் நிழற்குடை அமைத்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை