சாலையோர விபத்துகளை தடுக்க குவி ஆடி லென்ஸ் அமைப்பு தன்னார்வலர்கள் முயற்சி
கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சி செங்கழுநீரோடை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழியில் ஏராளமான குவி ஆடி லென்ஸ் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான சிறு கிராமங்கள் உள்ளன. இருபுறங்களிலும் அதிகளவு தென்னந்தோப்புகள் வழி நெடுகிலும் உள்ளது. இந்நிலையில் அதிகளவு குறுகிய வளைவுகளையும் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டுள்ளது.இதனால் தன்னார்வலர்களின் முயற்சியால் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் எதிரே வரக்கூடிய வாகனங்கள், பின்னால் வரக்கூடிய வாகனங்களை தெரிந்து கொள்வதற்காக மும்முனை சந்திப்பு பகுதிகளில் தன்னார்வலர்களின் முயற்சியால் குவி ஆடி லென்ஸ் அமைக்கப்பட்டுஉள்ளது. வாகன ஓட்டிகள் கூறியதாவது: திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல கிராமங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மும்முனை சந்திப்புகள் உள்ளது. இங்கு இது போன்ற குவி ஆடி லென்ஸ் பொருத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். இதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும். எதிரே வரக்கூடிய வாகனங்கள் அடுத்த வளைவில் வரக்கூடிய வாகனங்கள் குறித்த காட்சிகள் குவி ஆடி லென்ஸ் மூலமாக தெரிகிறது. இது போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களை ஒவ்வொரு ஊராட்சிகளிலும் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.