உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாக்காளர் விழிப்புணர்வு ஆட்டோ ஊர்வலம்

வாக்காளர் விழிப்புணர்வு ஆட்டோ ஊர்வலம்

பரமக்குடி: தொழிலாளர் தினத்தையொட்டி பரமக்குடியில் ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.நேற்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷா கவுர் தலைமையில் நடந்தது. ஐந்து முனை ரோடு பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.ஆர்ச், பெரிய பஜார் வழியாக பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. இதன்படி தொழிலாளர்கள் மத்தியிலும் தேர்தல் நேரங்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.தாசில்தார் வரதன், தேர்தல் துணை தாசில்தார் மீனாட்சி சுந்தரம் உட்பட வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை