மேலும் செய்திகள்
கீழ்பாடியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா
04-Jul-2025
சாயல்குடி: சாயல்குடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட கூடுதல் மருத்துவமனை கட்டடம் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.கடலாடி, சாயல்குடி, கன்னிராஜபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். மாவட்டத்திலேயே சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகளவு பிரசவம் நடக்கிறது.நாள்தோறும் நுாறுக்கும் அதிகமான புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டடம் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது.எனவே பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
04-Jul-2025