உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆற்றுக்குள் கிடந்த பட்டா கத்தி கொலைக்கு பயன்படுத்தபட்டதா

ஆற்றுக்குள் கிடந்த பட்டா கத்தி கொலைக்கு பயன்படுத்தபட்டதா

திருவாடானை: ஆற்றுக்குள் கிடந்த பட்டாக் கத்தியை போலீசார் கைப்பற்றி கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா என விசாரிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மணிமுத்தாறு உள்ளது. இந்த ஆற்றுக்குள் இரண்டு அடி நீள பட்டாக் கத்தி கிடந்தது. அப்பகுதி வழியாக சென்ற சிலர் போலீசுக்கு தெரிவித்தனர். திருவாடானை எஸ்.ஐ., முகமது சுல்தான் இப்ராஹிம், தனிப்பிரிவு ஏட்டு துரை ஆகியோர் கத்தியை கைப்பற்றினர். கத்தியானது தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. துருப்பிடிக்காமல் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வீசியிருக்கலாம் என்றும், கொலைக்காக பயன்படுத்தபட்ட கத்தியா என போலீசார் விசாரிக்கின்றனர். இது குறித்து அறிய ராமநாதபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கபடும் என்று போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ