/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீணாகும் குடிநீர் தொட்டிகள் வீணாகும் குடிநீர் தொட்டிகள்: அரசு நிதி வீணடிப்பு
வீணாகும் குடிநீர் தொட்டிகள் வீணாகும் குடிநீர் தொட்டிகள்: அரசு நிதி வீணடிப்பு
வாலிநோக்கம் : வாலிநோக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அடஞ்சேரியில் 2022-ல் ரூ.3 லட்சத்தில் அமைக்கப்பட்ட மூன்று குடிநீர் தொட்டிகள் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. அடஞ்சேரி வீரபத்திரன் கூறியதாவது: இங்கு 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தெருக்களில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்கான மூன்று 5000 லி., பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் சப்ளையும் இன்றி காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.டிராக்டரில் குடம் ரூ.12க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். வருமானத்தில் ஒரு பகுதி குடிநீருக்கே செலவிட வேண்டிய நிலை உள்ளது. காவிரி குடிநீர் வரத்திற்காக அமைக்கப்பட்ட இத்திட்டம் செயல்பாடின்றி முடங்கியுள்ளது. எனவே வாலிநோக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.