கீழக்குறிச்சியில் குடிநீர் தட்டுபாடு
திருவாடானை; திருவாடானை அருகே கட்டிவயல் ஊராட்சி கீழக்குறிச்சியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மூன்று மாதங்களாக குடிநீர் வராமல் மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். இது குறித்து அக் கிராம மக்கள் கூறியதாவது- தற்போது பெய்த மழையால் ஆங்காங்கே தேங்கியிருக்கும் நீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துகிறோம். ஆனால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதியாக உள்ளது. இங்கு அன்றாடம் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்துபவர்கள் அதிகமாக இருப்பதால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாமல் தவிக்கிறோம். அதிகாரிகள் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.