கண்மாய் நீர் பாய்ச்சுதல்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் முளைத்தன. தற்போது களைக் கொல்லி மருந்து தெளித்தல், களை பறித்தல் உள்ளிட்ட விவசாய பணிகள் நடக்கிறது. இந்நிலையில் தற்போது மழை இல்லாததால் வறட்சியில் இருந்து பாதுகாக்க ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் உட்பட அதன் கீழ் உள்ள சிறிய கண்மாய்களிலும் தேங்கியுள்ள குறைந்த அளவு தண்ணீரை பாய்சுகின்றனர்.