உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை

வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் வராகி அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. முன்னோர்கள் மற்றும் பித்ருகளால் ஏற்பட்ட சாபங்கள் நிவர்த்தி பெற வேண்டியும், பில்லி சூனியம் இவற்றில் இருந்து விடுபடவும் வராகி அம்மனுக்கு நாள்தோறும் ஏராளமானோர் வழிபடுகின்றனர். நேற்று வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள அம்மிக்கல்லில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டையாக பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு பழங்கள், கிழங்குகள், பட்டு சாத்தி வழிபாடு செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை