உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் பல் நோக்கு வளாகம் வீண் அல்லு நீட்ட முடியாமல் நெசவாளர் தவிப்பு

பரமக்குடியில் பல் நோக்கு வளாகம் வீண் அல்லு நீட்ட முடியாமல் நெசவாளர் தவிப்பு

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி ஜி.வி பந்த் தெருவில் ரூ.6.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பல்நோக்கு வளாகம் பயன்பாடின்றி வீணாகி உள்ளது. அல்லு நீட்ட முடியாமல் நெசவாளர்கள் தவிக்கின்றனர்.பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கின்றனர். இவர்கள் மழை, வெயில் நேரங்களில் தெருக்களில் அல்லு நீட்ட முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையின் போதும் அனைத்து கட்சியினரும் அல்லுக்கூடம் அமைக்க உறுதிமொழி கொடுக்கின்றனர். இச்சூழலில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சிக்கு உட்பட்ட ஜி.வி பந்த் தெருவில் பல்நோக்கு வளாகம் 6.10 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டது. இங்கு உள்ள குறுகிய இடத்தில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் வேலி மற்றும் கேட் அமைக்கப்பட்டது. தொடர்ந்து பெயரளவில் அல்லு கூடம் கல்வெட்டு வைக்கப்பட்டது. ஆனால் மழை நேரங்களில் தொழில் செய்ய முடியாமல் உள்ளதுடன் குறுகிய இடமாக உள்ளதால் இந்த இடத்தை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மேலும் கதவுகள் திருடப்பட்டு வேலிகள் அனைத்தும் உடைந்துள்ளன. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தங்குவதால் பாதுகாப்பற்ற சூழலில் மக்கள் உள்ளனர். ஆகவே நகராட்சி நிர்வாகம் இந்த வளாகத்தை மீண்டும் சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி