பளு துாக்குதல் மையம் திறப்பு
பரமக்குடி: -பரமக்குடி மினி விளையாட்டு அரங்கில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய பளு துாக்கும் பயிற்சி மையம் திறக்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ஏப்.,5ல் துணை முதல்வர் உதயநிதி காணொலி மூலம் திறந்தார். தொடர்ந்து மினி விளையாட்டு அரங்கத்தில் உள்ள ஸ்டார் அகாடமி பளு துாக்கும் மையத்தை எம்.எல்.ஏ., முருகேசன் இயக்கி வைத்தார்.பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷா கவுர் குத்துவிளக்கு ஏற்றினார். விளையாட்டு வீரர்கள் பளு துாக்கி திறமையை வெளிப்படுத்தினர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, தாசில்தார் பரதன், உடற்பயிற்சி கூடங்களைச் சார்ந்த நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.