உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே புல்வாய்க்குளத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடந்தது. பல்வேறு துறைகளின் சாதனை விளக்க கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். இயற்கை மரணம் உதவித்தொகை, பட்டா, இலவசவீட்டு மனை பட்டா, ரேஷன் கார்டு, பிரதமரின் நுண்ணுயிர் பாசன திட்டங்களில் 91 பேருக்கு ரூ.1.44 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முகாமில் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து 112 பேர் மனுக்கள் அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறினார். பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி, தாசில்தார் கோகுல்நாத், பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகர்,சந்திரமோகன் உட்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ