உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கிடாரம் நுாலகத்தில் ஊராட்சி அலுவலகம் புதிய கட்டடம் திறப்பு விழா எப்போது

கீழக்கிடாரம் நுாலகத்தில் ஊராட்சி அலுவலகம் புதிய கட்டடம் திறப்பு விழா எப்போது

சிக்கல்: கடலாடி ஒன்றியம் கீழக்கிடாரம் ஊராட்சி அலுவலகம் நுாலக கட்டடத்தில் இயங்கி வரும் நிலையில் புதிய கட்டடம் திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. கீழக்கிடாரம் ஊராட்சி காவாகுளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் செயல்படும் கிராமப்புற நுாலகத்தில் ஊராட்சி அலுவலகம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. காவாகுளத்தில் 8 மாதங்களுக்கு முன்பு ரூ. 40 லட்சத்தில் கட்டப்பட்ட கீழக்கிடாரம் ஊராட்சி அலுவலகம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.புதிய தமிழகம் கட்சியின் கடலாடி ஒன்றிய செயலாளர் லாசர் கூறியதாவது:அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமப்புற நுாலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தும் அவற்றை வாசிப்பதற்கு கூட இயலாத நிலையில் ஓரிடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதே கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. ஊராட்சிக்கு கட்டப்பட்ட புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இதுவரை திறப்பு விழா காணாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் காவாகுளத்தில் புதிய ஊராட்சி அலுவலகத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அலுவலகத்தில் குடிநீர் வசதி செய்ய வேண்டும். இது குறித்து கோரிக்கை மனு அளித்துள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை