உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் வாசலில் மெகா பள்ளம் விபத்துக்கு யார் பொறுப்பு

பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் வாசலில் மெகா பள்ளம் விபத்துக்கு யார் பொறுப்பு

பரமக்குடி: பரமக்குடி பஸ் ஸ்டாண்டிற்குள் நுழையும் இடங்களில் மெகா பள்ளம் உருவாகி உள்ள நிலையில் பயணிகள் தடுமாற்றத்துடன் ஆபத்தாக பயணிக்கின்றனர். பரமக்குடி நகராட்சி பஸ் ஸ்டாண்ட் ராமநாத புரம் ரோட்டோரம் உள்ளது. இங்கு பரமக்குடி பணி மனையில் இருந்து 80க்கும் மேற்பட்ட பஸ்கள் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து பல நுாறு பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை உள்ளடக்கியுள்ளதால் பல ஆயிரம் பயணிகள் பஸ் ஸ்டாண்டை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்டின் முன்பு ரோட்டிற்கு இடையில் 2 அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் டிரைவர்கள் தடுமாறுவதுடன் பஸ்களின் பாகங்கள் சேதமடைந்து வருகிறது. அப்போது பஸ்களில் அமர்ந்திருக்கும் முதியோர், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் தடுமாறும் நிலை உள்ளது. தொடர்ந்து படிக்கட்டு பகுதிகளில் இருப்போர் கவனம் சிதறினால் கீழே விழுந்து விபத்து உண்டாகும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. எனவே ஒட்டுமொத்த மாக உள்ள பள்ளத்தை துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி