உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண்டபம் பல் மருத்துவமனைக்கு  உபகரணங்கள் வழங்கப்படுமா 

மண்டபம் பல் மருத்துவமனைக்கு  உபகரணங்கள் வழங்கப்படுமா 

உச்சிப்புளி: -மண்டபம் அரசு மருத்துவமனையில் உள்ள பல் மருத்துவப்பிரிவுக்கு உரிய உபகரணங்கள் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மண்டபம் கேம்ப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 2024ல் பல் மருத்துவப்பிரிவு உருவாக்கப்பட்டு அதற்கான டாக்டர் பணியமர்த்தப்பட்டார். அங்கு டாக்டர் இருந்தும் பல் மருத்துவம் செய்வதற்கான உபகரணங்கள் இல்லாத நிலையில் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மண்டபம் கேம்ப் அரசு மருத்துவமனை பல் மருத்துவப்பிரிவுக்கு வந்த பல் மருத்துவ உபகரணங்கள் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. தற்போது அங்கு பல் டாக்டர் இருந்தும் சிகிச்சைகான உபகரணங்கள் இல்லாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு 35 கி.மீ., பயணித்து சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு மண்டபம் பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.பல் மருத்துவப்பிரிவுக்கு சிறப்பு டாக்டர் நியமித்து ஓராண்டுக்கும் மேலாக பல் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து மண்டபம் கேம்ப் அரசு மருத்துவமனையில் பல் மருத்துவப்பிரிவு முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !