உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கள்ளழகருக்காக திறக்கப்படும் வைகை நீர்  பரமக்குடி வரை வருமா: மக்கள் எதிர்பார்ப்பு 

கள்ளழகருக்காக திறக்கப்படும் வைகை நீர்  பரமக்குடி வரை வருமா: மக்கள் எதிர்பார்ப்பு 

ராமநாதபுரம்; -வைகை அணையிலிருந்து மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக திறக்கப்படும் தண்ணீர்பரமக்குடி வரை வந்து சேருமா, என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆண்டு தோறும் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா நிகழ்ச்சியில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இந்தாண்டும் வைகை அணையிலிருந்து மே 8 ம் தேதி மாலை 6:00 மணியிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று (மே 12) காலை 6:00 மணி வரை 216 மில்லியன் கன அடி திறக்கப்படவுள்ளது. திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றின் பாதை வழியாக வருகை தரும்.கோடை காலத்தில் வைகை ஆற்றின் படுகைகளில் வற்றிய நீரால் பாதிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள் மீண்டும்வலுப்பெறும். இந்தாண்டு கோடை மழை காரணமாக வைகை ஆறு பேரணை முதல் விரகனுார், விரகனுார் முதல் பார்த்திபனுார் மதகணை வரை ஈரம் கசிந்துள்ளது. வைகை ஆற்றுப்படுகைகள் உள்ள அனைத்து இடங்களிலும் கிராமப்புறங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகள் நடக்கும். சோழவந்தான், மானாமதுரை, பரமக்குடி, அனைத்து பகுதிகளிலும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கும். இந்தாண்டு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பரமக்குடி வரை வைகை ஆற்றில் பயணிக்க வாய்ப்புள்ளது.அப்படி வரும் பட்சத்தில் கோடையில் குடி நீர் தட்டுப்பாடு நீங்கும் நிலை இருப்பதால் பரமக்குடி வரை வைகை ஆற்றில் தண்ணீர் வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை