உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கேரளா டூ வேளாங்கண்ணி 19 நாள் நடைபயணமாக செல்லும் பெண்கள்

கேரளா டூ வேளாங்கண்ணி 19 நாள் நடைபயணமாக செல்லும் பெண்கள்

ராமநாதபுரம் : கேரள மாநிலத்தை சேர்ந்த 40 பெண் பக்தர்கள் அவர்களது ஊரில் இருந்து வேளாங்கண்ணி சர்ச் வரை 19 நாட்கள் நடைபயணமாக செல்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை மாதா சர்ச் திருவிழாவை முன்னிட்டு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த 40 பெண் பக்தர்கள் நடைபயணமாக வேளாங்கண்ணி சர்ச் திருவிழாவிற்கு செல்கின்றனர். இவர்கள் நேற்றுராமநாதபுரத்திற்கு வந்தனர். இதுகுறித்து பெலரஸ்மேரி கூறியதாவது: எங்கள் ஊரில் ஆக.,12ல் புறப்பட்டு நடைபயணமாக நாகர் கோவில், திருநெல்வேலி வழியாக ராமநாதபுரம் வந்து ஆர்.எஸ்.மங்கலம் வழியாக நாகபட்டினம் வேளாங்கண்ணி சர்ச்சுக்கு ஆக.,29ல் கொடியேற்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று அன்னையை வழிப்பட்டு ஆக.,30ல் பஸ்சில் ஊருக்கு திரும்ப உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை