உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆப்பிராய் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காலி குடத்துடன் அலையும் பெண்கள்

ஆப்பிராய் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காலி குடத்துடன் அலையும் பெண்கள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆப்பிராய் பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, காவிரி கூட்டு குடிநீர் வராமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, அப்பகுதி பெண்கள் 3 கி.மீ.,ல் உள்ள ஏ.ஆர்.மங்கலத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் சென்று பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் நிலவும் தொடர் குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக, அப்பகுதியில் விற்பனையாகும் பாதுகாப்பற்ற குடிநீரை குடம் ரூ.15 வரை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை