உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிய மேம்பாலப் பணி மும்முரம்

புதிய மேம்பாலப் பணி மும்முரம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் -பரமக்குடி ரோட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது.முதுகுளத்துார் -பரமக்குடி ரோடு செல்வநாயகபுரம் விலக்கு அருகே வரத்துகால்வாயை கடந்து செல்வதற்காக 75 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. பின் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வர்ணம் பூசுதல் உட்பட மராமத்து பணி செய்து வந்தனர். முதுகுளத்துார்- பரமக்குடி செல்லும் முக்கியமான ரோடு என்பதால் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. இவ்வழியே எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அவசர காலத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை உருவாகிறது.போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் வகையில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2023--24ம் ஆண்டு ரூ.3 கோடியே 85 லட்சத்தில் பழைய மேம்பாலம் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி முழுவீச்சில் நடக்கிறது.பணிகள் முடிவடைந்தவுடன் ஒருவழிப் பாதையாக மாற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேம்பாலம் தற்போது வரை எந்த சேதமும் இன்றி பயன்பாட்டில் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை