மேலும் செய்திகள்
அங்கன்வாடி மையத்திற்கு கட்டடம் கட்ட கோரிக்கை
22-Nov-2024
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.77.32 லட்சத்தில் நடந்து வரும் பணிகளை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார்.பெருங்களூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கல்வித்தரத்தை கேட்டறிந்தார். ரூ.29 லட்சத்தில் 2 வகுப்பறைகள், ரூ.2.97 லட்சத்தில் பேவர் கல் தளம் பணி, ரூ.30 லட்சத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம் பணி, ரூ.10.93 லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் பணிகளை ஆய்வு செய்தார்.வயலுார் ஊராட்சியில் ரூ.4.42 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தார். நயினார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
22-Nov-2024