உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உலக புத்தக தினப் போட்டி பரிசளிப்பு

உலக புத்தக தினப் போட்டி பரிசளிப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த உலக புத்தக தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாவட்ட மைய நுாலகம், வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா போட்டிகள் மாணவர்களுக்கு நடந்தது. இதில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட மைய நுாலகத்தில் நடந்தது. வாசகர் வட்டத்தலைவர் மங்கள சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் லியோன் முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி)கர்ணன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சேதுபதி அரசுக்கல்லுாரி ஆங்கிலத்துறைத்தலைவர் ஜெயமுருகன், வாசகர் வட்டம் தேவி உலகராஜ், தமிழரசி, மன நல ஆலோசகர் அஸ்ரப்அலி, அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் காந்தி, பொருளாளர் பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். ஓவியப்போட்டி, கதை கூறுதல், நுால் அறிமுகம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசும் வழங்கப்பட்டது. அறிவியல் இயக்க இணை செயலாளர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை