உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உலக தாய்ப்பால் வார விழா

உலக தாய்ப்பால் வார விழா

ராமநாதபுரம் : ராமநாதபுத்தில் சர்வதேச மகளிர் சங்கமான இன்னர் வீல் சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சங்கத்தின் தலைவர் ஹரிதா தலைமை வகித்தார்.செயலர் கவிதா, பொருளாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆக.,1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்படுகிறது. டாக்டர்கள்மதுரம்,கனகபிரியா ஆகியோர் தாய்ப்பாலின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தை பற்றி குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் எடுத்துரைத்தனர். பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !