உலக மலேரியா தின உறுதிமொழி
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு ஐ.டி.ஐ.,யில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். முதல்வர் குப்புசாமி முன்னிலை வகித்தார். இளநிலை பூச்சியில் வல்லுநர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். உலக மலேரியா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுத்தனர். ஆசிரியர்கள் குருநாதன், சேது பாஸ்கர், வட்டார சுகாதார அமைப்பாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் நேதாஜி உட்பட பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.