உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உலக மண் தின விழிப்புணர்வு

உலக மண் தின விழிப்புணர்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பாப்பாகுடி கிராமத்தில் உலக மண் தினம் (டிச.,5) விழிப்புணர்வு முகாம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மோகன்ராஜ் தலைமை வகித்து, பயிர் சாகுபடி உற்பத்தியில் மண்ணின் முக்கியத்துவம் குறித்தும், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுத் தேவையை நிறைவு செய்திட மண் வளத்தை பாதுகாத்து பயிர் உற்பத்தியை பெருக்கிடும் உத்திகளை எடுத்துரைத்தார். துணை இயக்குநர்கள் பாஸ்கர மணியன், அமர்லால் ஆகியோர் மண்ணில் உள்ள சத்துக்கள், மண் மாதிரி எடுத்தல் மற்றும் மண் வள அட்டை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், வேளாண்மை அலுவலர் தமிழ், உதவி அலுவலர் குணசேகரன் , அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் கோசலாதேவி, உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜேஸ்குமார் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை