ஐயப்பன் கோயிலில் பூஜை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா அறக்கட்டளை சார்பில் சித்திரை மாத பிறப்பு பூஜை நடந்தது. குருநாதர் திருமால் தலைமை வகித்தார். துணை குருநாதர் புயல்நாதன், தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர். யாகசால பூஜைகள் நடந்தது. படிபூஜை, பஜனை வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.செயலாளர் அருண்பிரசாத், பொருளாளர் மணிகண்டன், பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோன்று முதுகுளத்துார்,கமுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் சித்திரை மாதம் பிறப்பு பூஜை நடந்தது.