மேலும் செய்திகள்
236 சத்துணவு உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
11-Apr-2025
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. தகுதியுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி அந்தந்த வட்டார அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்குப்பின் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் அறிவிப்பு நாளில் 21 முதல் 40க்குள், பழங்குடியினர் 18 முதல் 40 , விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட துாரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் ஏப்.,26க்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். https:/ramanathapuram.nic.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
11-Apr-2025