உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழ்செம்மல் விருது விண்ணப்பிக்கலாம் 

தமிழ்செம்மல் விருது விண்ணப்பிக்கலாம் 

ராமநாதபுரம்: தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழ் செம்மல் விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் வழங்கப்படுகிறது. 2025ம் ஆண்டிற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalrchithurai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிபரக்குறிப்பு, பரிந்துரை கடிதங்கள், வெளியிட்டுள்ள புத்தகங்கள், வெளியிட்டுள்ள ஆவணங்கள், புகைப்படங்கள் இணைத்து, ஆதார் நகல் உள்ளிட்டவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் செப்.,1க்குள் வழங்க வேண்டும். நேரடியாக வழங்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை