சட்ட தன்னார்வலராக விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலராக பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். மாவட்ட நீதிமன்றத்தின் https://ramanathapuram.dcourts.gov.in/ எனும் இணையதள பக்கத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அக்.,25-க்குள் 'தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கலெக்டர் வளாகம், ராமநாதபுரம்,' என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். தகுதியான 50 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். பின் சட்டப்பணிகள் நடத்தும் விழிப்புணர்வு முகாம்களில் தன்னார்லராக பங்கேற்கலாம்.