/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீன்பிடி வலை திருடி கைதான வாலிபர் தப்பி ஓட்டம் 2 எஸ்.எஸ்.ஐ.,கள் சஸ்பெண்ட்
மீன்பிடி வலை திருடி கைதான வாலிபர் தப்பி ஓட்டம் 2 எஸ்.எஸ்.ஐ.,கள் சஸ்பெண்ட்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் மீன்பிடி வலைகளை திருடி கைதான வாலிபரை சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் தப்பினார். இதையடுத்து இரு எஸ்.எஸ்.ஐ.,கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.ராமேஸ்வரம் கடற்கரையில் மீன்பிடி தளவாடங்கள் வைத்துள்ள குடிசைகளில் புகுந்த திருடன் வலைகள், மீன்பிடி தளவாட இரும்பு பொருள்களை திருடிச் சென்றார். இது தொடர்பாக ராமேஸ்வரம் எம்.ஆர்.டி., நகர் சந்துருவை 24, துறைமுகம் போலீசார் தேடினர்.சில நாட்களுக்கு முன்பு சந்துருவை போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்க சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ரவி, நாராயணன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து டூவீலரில் ஏற்றி செல்ல முயன்றனர். அப்போது சந்துரு எஸ்.எஸ்.ஐ.,க்களை தள்ளிவிட்டு தப்பினார். அலட்சியமாக இருந்ததாக இரு எஸ்.எஸ்.ஐ., க்களை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.,சந்தீஷ் உத்தரவிட்டார்.