குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
தொண்டி; பரமக்குடியை சேர்ந்தவர் முத்துகுமார் 29. ராட்டினம் அமைக்கும் தொழில் செய்தார்.நம்புதாளையில் தங்கியிருந்த முத்துகுமார் கள்ளக்காதல் தகராறில் நவ.2ல் கொலை செய்யபட்டார். தொண்டி போலீசார் திருவாடானை அருகே கடம்பாகுடியை சேர்ந்த சொக்கு 19, உட்பட எட்டு பேரை கைது செய்தனர்.சொக்கு மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. அதனை தொடர்ந்து சொக்குவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தொண்டி போலீசார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.