மேலும் செய்திகள்
அய்யனார் கோயில் பொங்கல் விழா
16-Jun-2025
கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கருமேனி அம்மன் கோயில் பின்புறம் நல்லுக்குமாரை 22, மர்மநபர்கள் வாளால் வெட்டிக்கொலை செய்தனர்.விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டியை சேர்ந்தவர் நல்லுக்குமார். கமுதி கோட்டை மேட்டில் வசித்து வந்தார். இவரை நேற்று முன்தினம் இரவு முதல் காணவில்லை. இந்நிலையில் கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கருமேனி அம்மன் கோயில் பின்புறம் நல்லுக்குமார் மர்ம நபர்களால் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்த மண்டலமாணிக்கம் போலீசார் மேல்விசாரணை நடத்துகின்றனர்.
16-Jun-2025