உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர்கள் மோதல் வாலிபர் பலி

டூவீலர்கள் மோதல் வாலிபர் பலி

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகர் பகுதியில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயம் அடைந்தனர். ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை ரோடு பகுதியில் வசிக்கும் கருணாநிதி மகன் பாலமுருகன் 33. இவர் ஆர்.எஸ்.மங்கலத்தில் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்று இரவு 7:30 மணிக்கு திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திரா நகர் பகுதியில் உள்ள பேக்கரிக்கு டூவீலரில் சென்றார். இவரது டூவீலரும் எதிரில் இந்திரா நகரில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் நோக்கி வல்லமடையைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் மகிம் 22, ஓட்டி வந்த டூவீலரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் பாலமுருகன், மகிம், மகிம் டூவீலரில் பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் மனோஜ் 22, மூவரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களுக்கு ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் பாலமுருகன் பலியானார். மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை