உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் கடலில் யூடியுபர்கள் ஆபத்தான படகு சவாரி

பாம்பன் கடலில் யூடியுபர்கள் ஆபத்தான படகு சவாரி

ராமேஸ்வரம்:பாம்பனில் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். பாம்பன் கடலில் உள்ள மன்னார் வளைகுடா தீவுகள், தேசிய நெடுஞ்சாலை பாலம் மற்றும் ரயில் பாலத்தை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர். இதில் குருசடை தீவுக்கு செல்ல பாம்பனில் இருந்து வனத்துறையின் படகு சவாரி உள்ளது.இந்நிலையில் யூடியுபர்கள் சிலர் லைக் மூலம் வருவாய் பார்க்கும் நோக்கத்தில் பாம்பனில் நாட்டுப்படகுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மீன்வளத்துறையினர் அனுமதியின்றி ஆபத்தான சவாரி செய்து மீன்பிடிப்பது போல் வீடியோ எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.அவர்களை பார்த்து பொதுமக்களும் இதுபோல் ஆபத்தான படகு சவாரி செல்லும் வாய்ப்பும் உள்ளது. பாம்பனில் விதிமீறி செல்வோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை