உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / சிக்னலை மறைத்த பனி ரயில் இயக்கம் பாதிப்பு

சிக்னலை மறைத்த பனி ரயில் இயக்கம் பாதிப்பு

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் வழியாக அதிகாலை, 4:00 முதல், 8:00 மணி வரை நாள்தோறும், 25க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பயணியர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்பகுதியில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால், சிக்னல்கள் சரிவர தெரியாத நிலையில், 80 முதல், 120 கி.மீ., வேகம் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 40 முதல் 60 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும் பயணியர் ரயிலும், சராசரியாக, 20 -- 30 கி.மீ., குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன.இதனால், சரியான நேரத்திற்கு பயணிக்க முடியாமல் பயணியர் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி