உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / 483 கிலோ குட்கா பறிமுதல்

483 கிலோ குட்கா பறிமுதல்

ஆற்காடு, பெங்களூருவிலிருந்து, சென்னைக்கு காரில் கடத்தி சென்ற, 483 கிலோ குட்கா புகையிலை பொருட்களை, ஆற்காடு போலீசார் பறிமுதல் செய்து, இரண்டு பேரை கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு டவுன் போலீசார், மேல் விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை நிறுத்தியபோது, போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்திவிட்டு, அதிலிருந்து இருவர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் பிடித்து காரில் சோதனை செய்ததில், 483 கிலோ குட்கா பொருட்கள், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.இதையடுத்து, கார் மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து, குட்காவை கடத்தி சென்ற, ராஜஸ்தான் மாநிலம், ஜாலுார் மாவட்டம், தொன்காவாவை சேர்ந்த தினேஷ்குமார், 28, பார்மிர் மாவட்டம், ரவாஸ்ஸார் கிராமத்தை சேர்ந்த சவாய்லால், 22, ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ