உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / தலைமை ஆசிரியர் வீட்டில் 5 சவரன் நகை திருட்டு

தலைமை ஆசிரியர் வீட்டில் 5 சவரன் நகை திருட்டு

அரக்கோணம்,:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர்குமரவேல் மனைவி செந்தாமரை, 56. ஆர்.என். கண்டிகையில்உள்ள அரசு துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வசிக்கிறார். கடந்த வாரம் சென்னையில் உள்ள தனது சகோதரரர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் பூட்டுஉடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் செந்தாமரைக்குமொபைல்போன் வாயிலாக தகவல் தெரிவித்தனர்.அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 சவரன் நகை, 160 கிராம் வெள்ளி மற்றும் 60,000 ரூபாய் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.இது குறித்து செந்தாமரை அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ