உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / தனியார் ஊழியர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை

தனியார் ஊழியர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை

காவேரிப்பாக்கம்:அரை நிர்வாணமாக வீட்டினுள் நுழைந்து, 60 சவரன் நகை, 1.50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மூன்று பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த முசிறி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ, 33; தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர், அப்பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இரவில் குடும்பத்தினர் அனைவரும், முதல் மாடியிலுள்ள அறையில் படுக்க சென்று விடுவர். நேற்று அதிகாலை, 2:00 மணியளவில் இளங்கோ பணி முடிந்து வீடு திரும்பியபோது, அவரது வீடு திறந்து கிடந்தது. உள்ளே அரை நிர்வாணத்துடன் இருந்த, மூன்று பேர் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கும்பல் அவரை வீட்டினுள் வைத்து, வெளியே பூட்டி விட்டு தப்பியது. பின்னர், வீட்டினுள் பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 60 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், 1.50 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை