உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / போதையில் அண்ணன் தகராறு கழுத்தறுத்து கொன்றார் தம்பி

போதையில் அண்ணன் தகராறு கழுத்தறுத்து கொன்றார் தம்பி

ராணிப்பேட்டை,: மது போதையில் தகராறு செய்த அண்ணனை, கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஹரி, 48; சென்னையில் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி, 45. இவர்களது மகன்கள் அய்யப்பன், 24, செல்வம், 22, அரவிந்த், 20; இதில் அய்யப்பன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். செல்வி, மகன்கள் செல்வம், அரவிந்த் ஆகியோர், செட்டிதாங்கல் கிராமத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். செல்வம் மது பழக்கத்திற்கு அடிமையானவர். நேற்று முன்தினம் இரவு, மது அருந்திவிட்டு செல்வி, அரவிந்திடம் தகராறில் ஈடுபட்டார். இதில், ஆத்திரமடைந்த அரவிந்த், செல்வத்தை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றார். நேற்று காலை உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்த நிலையில், அக்கம் பக்கத்தினர் ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் செல்வத்தின் உடலை கைப்பற்றி, அரவிந்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி