உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / போலி சான்றிதழ் கொடுத்த இருவர் மீது வழக்கு பதிவு

போலி சான்றிதழ் கொடுத்த இருவர் மீது வழக்கு பதிவு

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வாகும் ஆண், பெண் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இங்கு பயிற்சி நிறைவு செய்பவர்கள் விமான நிலையம், துறைமுகம், அணு உலைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள், கடந்த ஜனவரி 15-ம் தேதி பயிற்சி மையத்திற்கு வந்தனர்.அவர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்ப்புகாக, அந்தந்த மாநில அரசுகளுக்கு சான்றிதழ்களை அனுப்பி வைத்தனர். இதில், அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான வின்டியா வோர், 20, வினுகுமார், 21, ஆகியோரின் முகவரி சான்றிதழ்கள் போலி என்பது தெரிய வந்தது.இதுகுறித்து மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மைய இன்ஸ்பெக்டர் வசந்த், தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, தக்கோலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ