ரத்தினகிரியில் மேம்பாலம் கட்டும் பணி மெத்தனம் 3 கி.மீ., துாரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த ரத்தினகிரியில் மேம்பாலம் கட்டும் பணி மெத்தனமாக நடந்து வருவதால், அப்பகுதியில் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டு, 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.ராணிப்பேட்டை மாவட்டம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் இயங்கி வரும், சி.எம்.சி., மருத்துவமனை எதிரே, மேம்பாலம் கட்டும் பணி கடந்த, ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடந்து வந்தது. 'பெஞ்சல்' புயல்மழை காரணமாக மேம்பாலம் அமைக்கும் பகுதியில் கனரக வாகனங்கள் சென்று வர அமைக்-கப்பட்ட தற்காலிக சாலை, மழை நீரில் குண்டும் குழியுமாக மாறியது.நேற்று காலை, அப்பகுதியில் மழை பெய்ததால், குண்டும் குழி-யுமான சாலையை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வாகனங்கள் அப்பகுதியை மெதுவாக கடந்ததால், 3 கி.மீ., துாரத்திற்கு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிக்காளா-கினர். எனவே, மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.