சில்மிஷ முதியவர், சிறுவர்கள் கைது
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் முனுசாமி, 60, சக்கரவர்த்தி, 60, மற்றும், 13, 15 வயது பள்ளி மாணவர்கள் இருவர் என, நான்கு பேர், அரசு தொடக்கப்பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கும், 9 வயது மாணவிக்கு, சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். இதை, தன் தாயிடம் மாணவி தெரிவித்தார். ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், சக்கரவர்த்தி மற்றும் இரு மாணவர்கள் உட்பட, மூவரை போக்சோவில் கைது செய்தனர். தலைமறைவான முனுசாமியை தேடி வருகின்றனர்.