உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / சோளிங்கரில் கண்ணன் தீர்த்தவாரி

சோளிங்கரில் கண்ணன் தீர்த்தவாரி

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த தலத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நேற்று முன்தினம் அதிகாலை பக்தோசித பெருமாள், கருட வாகனத்தில் கோபுர வாசலில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர்.இதை தொடர்ந்து, நேற்று, கண்ணன் தீர்த்தவாரி நடைபெற்றது. அதே போல, ஆண்டாள் நீராட்டு உற்சவமும் நேற்று துவங்கி, நாளை வரை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ